
தூரத்தில் சரசரக்கும்
அவள் காலடியோசையில்
விழித்து விடுகிறதென் புலன்கள்
விழிக்காது நடிக்கிறேன் கொஞ்சம்...
என்னருகே அமர்ந்து
எடுத்து வாசிக்கிறாள்
அவளுக்கான என் கவிதையை...
ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
ஓரோர் எழுத்தாய்
எடுத்து உண்ணுபவளை...
எழுந்து போனபின்
எடுத்து வாசிக்கிறேன்
வெற்று காகிதத்தில்
அவள் விட்டுச் சென்ற கவிதையை...
8 comments:
நல்லா இருக்கு ராஜேஷ்.
நன்றி ராஜாராம் சார்.ஒரு நாளாவது திட்டுவீங்கன்னு பாக்கறேன்.ம்ஹீம் :)
காதல்..???
இருக்கலாம்..
ரொம்ப நல்லா இருக்கு :))
நன்றி ஸ்ரீமதி :)
//ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
ஓரோர் எழுத்தாய்
எடுத்து உண்ணுபவளை...//
ரெளத்ரன்,
என் வாசிப்பு பயணத்தில், எழுத்திலேயே வசிக்கும் ஒருவனின் கவிதை வரிகளை முதன் முதலாய்ப் படிக்கிறேன்.
அற்புதமைய்யா.!
(என் கண்ணில் உங்களைச் சிக்க வைத்த புண்ணியம் நண்பர் "பா.ரா" வைச் சாரும். அவருக்கு நமது நன்றிகள்.)
வருகைக்கு நன்றி சத்ரியன்...பா.ரா வுக்கும் :)
Post a Comment