Friday, October 9, 2009

மந்தையிலிருந்து...

மந்தையிலிருந்து
விலகி நடக்கிறது
ஒரு வெள்ளாடு...

உமிழ்நீர் சொட்ட
கோரப்பல் காட்டும்
ஓநாய்களுக்கு நடுவே
சாவகாசமாய்
நடந்து போகிறது அது...

வீரய்யன் கருப்பசாமி
பெயரில் என்ன ஏதொவொரு
குலசாமி நேர்த்தி கடன்
ஓசியில் முடியலாம்...

கரீம் பாய்
கடை வெளியே
தலைகீழாய் தொடைகறிக்கு
கல்லா நிரப்பலாம்...

கூட்டில் கல்லெறிந்தவன்
முகமூடி போட்டிருக்க
கொடுக்குகள் துளைத்தது
வெள்ளாட்டை...

சொட்டு சொட்டாய்
தேனீக்களின்
உதிரம் கொட்டும்
காடு விட்டு...

மந்தை விட்டு
மேய்ப்பன் விட்டு...

வேறென்ன செய்யும் அது...?

6 comments:

said...

yenna yenna!! endru pathaikkirathu!

--vidhya

said...

வருகைக்கு நன்றி மண்குதிரை...

வாங்க வித்யா...நன்றி!

said...

இந்த,"வேறு என்ன செய்யும் அதுவில்?"சும்மா,விர்ரிடுகிறது ராஜேஷ் கவிதை!உங்களை நான் ஏற்க்கனவே வாசித்ததில் இருந்து,இந்த இரண்டு கவிதைகளின் தொனியும் மாறி இருப்பது போல உணர்கிறேன்.variety-யா இருக்கு.வாழ்த்துக்கள் மக்கா!

said...

நன்றி ராஜா சார்..ஆமா மண்டை ஓடு,கபாலம்னு எழுதுனா ராத்திரில கெட்ட கெட்ட கனவா வருது.அதான் கொஞ்ச நாள் சாத்வீகமா போலாமேன்னு:)

said...

பின்றீங்க பாஸு
வாழ்த்துகள்

said...

நன்றி நேசமித்ரன்...