Friday, January 22, 2010

The bridges of madison county...

"முன்பின் தெரியாத ஒருவனுடன் நம்மை பிணைத்துக் கொண்டு திடீரென்று அவனுடன் எப்படி வாழ்க்கையைத் தொடங்குவது? ரசிக உணர்ச்சி இல்லாதவனாகவோ ஹாஸ்ய உணர்ச்சி இல்லாதவனாகவோ,முன் கோபக்காரணாகவோ அல்லது அரைக் கிறுக்காகவோ அசடாகவோ - இப்படி யாராவது ஒருவனுக்கு தீர விசாரிக்காமல் வாழ்க்கைப்பட்டு விட்டால்,அப்புறம் என்ன செய்ய முடியும்? கழற்றவே முடியாத விலங்கு - மாற்றவே முடியாத ஆயுள் தண்டனை."

என்ன பயங்கரம்!

-
ஆதவனின் 'சிறகுகள் ' என்ற குறு நாவலிலிருந்து...



கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த இயக்கிய சில திரைப்படங்கள் அற்புதமானவை.அவரது அலட்டலற்ற நடிப்பும் சன்னமான உணர்வுகளையும் பார்வையாளனிடம் கடத்திவிடும் இயக்க திறனும் வியக்க வைப்பவை.இணையம்,புத்தகம் என யாவும் வெறுப்பேற்றிய சில நாட்களுக்கு பிறகு மிதமான போதையுடனான இரவு துழாவலில் சிக்கியது இப்படம்.Million dollar baby க்கு பிறகு நெகிழ வைத்த மற்றொரு படம்.

ஒரு புதிய உறவு துளிர்க்கும் நொடியில் நம்மால் உணர முடிவதில்லை.இவ்வுறவு இறுதி வரை நீடிக்குமா அல்லது பாதியிலேயே இம்சிக்குமா என்றெல்லாம்.யாரோ வருவார்,யாரோ போவார் எனினும் இவர் நமக்கானவர் என ஒருவரை மனம் இனம் கானும் நிகழ்வு ஒரு அழகான புதிர்.சில சமயம் தோன்றும்.ஒவ்வொரு தனி மனிதனும் அன்பிற்காகவே ஏங்கிச் சாகிறான் என்று.என்னை புரிந்து கொள்,ஏற்று கொள்,மன்னித்து கொள் என்று கதறி மன்றாடுபவனது அகவலிகள் சொல்லி தீராததாகவே இருக்கிறது.
The Bridges of madison county...

நாற்பதுகளில் இருக்கும் ஃபிரான்செஸ்கா தனது 17 வயது மகன்,மகள் மற்றும் கணவனோடு அமெரிக்காவின் மேடிசன் பகுதியிலுள்ள லோவா என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறாள்.தன் கணவனின் விருப்பப்படி தனது ஆசிரியை தொழிலையும் விட்டு விட்டவள்,தன் குழந்தைகளின் வளர்ச்சியிலும்,சிறிய பண்ணையையும் கவனித்து கொள்வதில் பொழுதை செலவிடுகிறாள்.ஏதோ ஒரு காரணம் பொருட்டு தன் குழந்தைகள் மற்றும் கணவன் நான்கு நாட்கள் பயணமாக வெளியூர் செல்லும் நாளொன்றின் தனிமை பொழுதில்,அவ்வூரில் உள்ள பெயர் பெற்ற பாலங்களை புகைப்படம் எடுக்க வருகிறார் ஐம்பதுகளில் உள்ள ராபர்ட்.

பாலத்திற்கு செல்ல வழி கேட்கும் ராபர்ட்டோடு பாலம் வரை அவனோடு காரில் பயணிக்கும் ஃபிரான்செஸ்கோ அவனது முதிர்ந்த உரையாடல்களால் ஈர்க்கப்படுகிறாள்.திரும்பும் வழியில் தேனீர் அருந்த அழைக்கும் அவளது நட்பு ராபர்ட்டையும் ஈர்க்கிறது.திருமண பந்தத்தில் சிக்கி கொள்ளாமல் புகைப்படக் கருவியோடு மனம் போன போக்கில் நாடு நாடாக அலையும் அவனது ஆளுமை அவளை அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு கொள்ள செய்கிறது.குடும்பம் என்ற பொறுப்புகளுள் சிக்குண்ட பின் நிறமிழந்து போன தன் கனவுகளை,எதிர்பார்புகளை பகிர்ந்து கொள்ளப்படாத அகத்தனிமையை யதார்த்தமாக அவனிடம் கூறுகிறாள்.

ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் அவளை சற்றே உரசி விடும் உரையாடலின் த்வனியை தவிர்க்கும் பொருட்டு அவன் அவளுக்கு நன்றி கூறி வெளியேறுகிறான்.குற்ற உணர்வு கொள்ளும் அவள் மீண்டும் அவனை சந்திக்க விரும்புகிறாள்.உடற் கிளர்ச்சி என்ற சிறு புள்ளிக்குள் முடங்காத தவிப்பொன்று இருவருக்கும் இடையே தோன்றுகிறது.மெல்ல தன் வசமிழக்கும் இருவருக்குமிடையேயான மனக்கொந்தளிப்புகள் நம்மையும் உருக்க தொடங்குகிறது.இன்னும் இரண்டு நாட்களில் ராபர்ட் சென்று விடுவான் என்ற ஏக்கமும்,காதலற்ற ஒரு சராசரி குடும்ப தலைவி வேடத்திற்குள் மீண்டும் புதைய போகும் வருத்தங்களும் அவளை அலை கழிக்கிறது.போலவே ராபர்ட்டும் உணர்கிறான்.

அவளது கணவனிடம் தான் பேசுவதாகவும்,தன்னோடு வந்து விடும் படியும் கூறும் அவனது அழைப்பை மறுக்கிறாள்.பொறுப்புள்ள ஒரு தாயாக,மனைவியாக,சொந்த விருப்பு வெறுப்புள்ள ஒரு பெண்ணாக அவளுள் நிகழும் மனப்போராட்டங்கள் உறைய வைக்கின்றன.

Meryl Streep
தன் அபாரமான நடிப்பின் மூலம் கலங்கடித்திருக்கிறார்.நீ போய்விடுவாய்,காலமெல்லாம் காதலை சுமந்தபடி நான் இங்கே சாக வேண்டும் என கொந்தளிக்கும் போதும்,அவன் சென்ற பின் ஊரிலிருந்து திரும்ப வரும் தன் கணவனையும் குழந்தைகளையும் வரவேற்று சுவருக்கு பின்னே சென்று குமுறும் பொழுதும்,மீண்டும் சாலையில் பார்க்க நேரும் ராபர்ட்டை கண்டு அருகில் அமர்ந்திருக்கும் கணவனிடம் கூற முடியாது,கார் கதவை திறந்து விட தவித்து மருகும் பொழுதும் நொறுக்கி விடுகிறார்.

மத்திய வயதில் ஏற்படும் காதலை இதன் அளவிற்கு அழுத்தமாக சொன்ன வேறு படங்களை நான் பார்த்திருக்கவில்லை.
ராபர்ட் ஜேம்ஸ் வாலர் எழுதிய இந்நாவலையும் அவசியம் வாசித்து விட வேண்டும்

கற்பு,ஒழுக்கம் என்ற சமூக தீர்ப்புகள் தனி மனித விருப்புகளை கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை.திருமணங்கள் அற்புதமானதாய் இருக்கக்கூடும்.ஆழமான ஒரு புரிந்துணர்வில்.இப்பொழுது என் கழுத்திற்கு மேலேயும் ஒரு நுகத்தடி தொங்க காத்திருக்கும் பீதி.வாழ்க்கை வெறும் வட்டி தொழில் தானோ...நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே என்று பாடத்தொடங்கினால் வேற என்ன பொரட்சி செய்றதா உத்தேசம் தொரைக்கு என்று மிரட்டுகிறது தந்தை குலம்.ம்..இருக்கட்டும்.

பார்க்க வேண்டிய படம்.


13 comments:

said...

மிக நன்றாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள். மொழி நடை அருமை. படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுதல் ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி.:)

said...

நல்ல நடையில் நல்லதொரு விமர்சனம். அருமை ராஜேஷ்.

said...

நண்பா இது அற்புதமான படத்தினப்பற்றிய பதிவு.
க்ளிண்ட் ஈஸ்ட்வுடின் மில்லியன் டாரர் பேபி,மிஸ்டிக் ரிவர்,க்ரான் டொரினோ,அப்புறம் இப்பொது வந்த இன்விக்டஸ் எல்லோரும் பார்க்க வேண்டிய அற்புதமான படைப்பு.காலத்தை வென்ற படைப்பு.

said...

நீண்ட நாள் கழித்து ஒரு தீர்க்கமான விமர்சனத்தைப் படைத்த திருப்தி,நண்பரே.
அருமை.

said...

பேசிப்பழகி புடிச்சிருந்தா சேர்ந்துட வேண்டியதுதானே?

said...

பகிர்வுக்கு நன்றி :)

said...

வருகைக்கு நன்றி ரகுநாதன்...

நன்றி நவாஸீதீன்.நாம விமர்சனமெல்லாம் எந்த காலத்துல எழுதுனோம்..பகிர்வு அம்புட்டுதேன் :))

வருகைக்கு நன்றி கார்த்திகேயன்...எல்லா படமும் இருக்கிறது.பார்க்க வேண்டும்...

வருகைக்கு நன்றி ஷன்முகப்ரியன்...

யோவ் கறுப்பி...அடங்கொய்யால :)

நன்றி தமிழன்...

said...

பகிர்வுக்கு நன்றி.
//மிரட்டுகிறது தந்தை குலம்.ம்..இருக்கட்டும்.//
:)))

said...

// Million dollar baby //

ரொம்பநாள் தேடல்ல இருக்குர படம்

பகிவுக்கு நன்றி தல

said...

அன்பின் ராஜேஷ்..

அருமையான விமர்சனம், பகிர்வுக்கு நன்றி.

said...

நன்றி கல்ஃப் தமிழன் :)

நன்றி கார்த்திக்...எல்லா படங்களும் தான் கிடைக்கிறதே நண்பா...யாராவது வந்தால் எல்லாவற்றையும் கொடுத்தனுப்ப முயல்கிறேன்..இங்கே மூட்டை மூட்டையாக சேர்ந்து விட்டது படங்கள் :)

நன்றி சரவணன் :)

said...

மொழிநடை வியக்கவைக்கிறது. :)) விமர்சனம் அருமை.

said...

நன்றி ஸ்ரீமதி :))