Thursday, March 12, 2009
நீல வெயில்...
கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...
உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...
சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...
வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...
இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
// உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா.//
ரசிக்கும் படியான வரிகள்
என்ன கவிஞரே ரொம்ப நாளா ஆளக்கானோம்.
//நதியில் மிதக்கும் நிலா
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...//
அருமையான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.
வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com
- பொன். வாசுதேவன்
நல்லா இருக்குங்க
நன்றி கார்த்திக்..
நன்றி அகநாழிகை..
வருகைக்கு நன்றி கிஷோர்...
நன்றி ரெளத்ரன்.
எனது வலையின் வருகைக்கும் ஆலோசனைக்கும்.
முயற்ச்சிக்கிறேன்.
ஈ மெயில்: butterflysurya@gmail.com
அட்டகாசம் ரௌத்ரன். மொழி மிக அழகு.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா :)
ஆளுமையான மொழி ரௌத்ரன்...
கவிதையை வாசித்து,அங்கேயே கிடைக்கணும் போல்
இருக்கு."நதியில் மிதக்கும் நிலா ஒருபோதும்
நனையாதது குறித்து அதற்க்கு வருத்தமும் இல்லை" இல்
மனசு சுழல்கிறது!அற்புதம் ரௌத்ரன்!..
வருகைக்கு நன்றி திரு.ராஜாராம்...சற்றுமுன் வரை தங்கள் கவிதைகளை தான் வாசித்துக் கொண்டிருந்தேன்...ஆழமான அழகான கவிதைகள்..பொறுமையாக வாசிக்க வேண்டும் என எண்ணியபடி வந்தேன்..நீங்களே வந்து விட்டீர்கள்..மிகவும் நன்றி...
Post a Comment