காற்றில் படபடக்கிறது
என்றோ நிலவொளியில்
நீ எழுதிய இசைகுறிப்பு...
மூலையில் கிடக்கிறதென் கிதார்
கம்பியிழை தொய்ந்து...
இவ்விரவை
மழையால் நனைக்கவும்
ஒளியால் நிறைக்கவும்
கூடுமவை...
நீயும் நானுமற்ற
நம் அறைக்குள்
எங்கிருந்தோ
உன் இசை குறிப்பிலும்
என் கிதாரிலுமாய்
வந்தமரும்
வண்ணத்து பூச்சிகள்
பறந்தோடுகின்றன
வெளியே
றெக்கை வெடவெடத்து...
Monday, August 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//இவ்விரவை
மழையால் நனைக்கவும்
ஒளியால் நிறைக்கவும்
கூடுமவை...//
மழை ஒரு அடர் மௌனத்தைக்
கூட்டிவிடும் கிரியா ஊக்கி,
மழையின் இசை மிகவும்
வெதுவெதுப்பானது
நல்ல கவிதை.
நல்லா இருக்குங்க கவிதை
வருகைக்கு நன்றி திரு.காமராஜ்..
நன்றி திரு.நேசமித்ரன்..
நல்லா இருக்கு ரௌத்ரன்.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா...
நல்லா வந்துருக்கு ராஜேஷ்-இந்தமுறை அடைப்பு குறி வேணாம்.எதுக்கு வம்பு.
நன்றி திரு.ராஜாராம் :)
//நீயும் நானுமற்ற
நம் அறைக்குள்//
நினைவுகளுக்கென்று ஒரு வாழ்விருக்குமோ?
கேள்வியின் நாயகனே..இந்த கேள்விக்கு விடை ஏதையா?
ரொம்ப யோசிக்க வைக்காதீங்கப்பா :)
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))(உங்க பேர் தான் கொஞ்சம் பயமா இருக்கு... ;))))))) இப்படி போட்டா திட்ட மாட்டீங்களே?? :( )
வாங்க ஸ்ரீமதி...வருகைக்கு நன்றி...பயமா?? ஏதோ ஆர்வக்கோளாறுல தெரியாத்தனமா இந்த பேர வச்சுகிட்டேன்...உண்மையில நான் ஒரு வாயில்லா பூச்சி..நம்புங்க ;)
//நான் ஒரு வாயில்லா பூச்சி..//
அப்பறம் எப்படி சாப்பிடுவீங்க?? :(((
அப்பறம் எப்படி சாப்பிடுவீங்க?? :(((
ஆகா...நானாத்தான் ஒளறிட்டனோ :)
Post a Comment