Wednesday, December 23, 2009

ஒரு மழை மேகம்...

கண்ணாடி பதித்த
உன் ஸ்டிக்கர் பொட்டு தேர்வுகளோ
நாட்களுள் சுழலும் உன் அவஸ்தை குறித்தோ
யாதொரு கவனமும் இல்லை எனக்கு...

வாயிலா காட்டனா
மோஸ்தர் என்ன இப்பொழுது
சுங்கிடி? சுரிதார்?
என்ன பிடிக்கும் உனக்கு
ஒன்றும் புரிவதில்லை...

என் தேவைகள்
சொற்பம்...

நான் போதும் எனக்கு

எனினும்

நிக்கோடின் படிந்த
உதடுகளை
முத்தமிட மறுத்து

நீ
தொடை குறுக்கும்
இரவுகளில்

என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது...

17 comments:

said...

இந்தக் கவிதை மிகப் பிடித்திருக்கிறது எனக்கு.

said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜேஷ்.

said...

கவிதை மிக அருமை ராஜேஷ், சமீபத்தில் வலையில் வாசித்தவற்றுள் மிகச் சிறந்த ஒன்று நண்பா.

Anonymous said...

என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது... ....

கவிதையின் பயணத்திற்க்கு எல்லை இல்லை
சிறு துளியையும் வெள்ள பெருக்கெடுக்க வைக்கும்...
அபடித்தான் இந்த வரிகளும்...உன் கற்ப்பனை வண்ணத்தில்..தூரிகைகளில் இருந்து கொட்டுகிறது....மலர்ந்து விரிந்து...பயணிக்கிறது

said...

நல்லா வந்திருக்கு ரௌத்ரன்.

said...

:) நல்லாருக்குங்க.

-வித்யா

said...

//என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது...//

ரௌத்ரன் வித்தை தெரிந்தவன்... :)

said...

\\நிக்கோடின் படிந்த
உதடுகளை
முத்தமிட மறுத்து

நீ
தொடை குறுக்கும்
இரவுகளில்

என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது...\\

என்ன சொல்றது நண்பா, எனக்கு பேச்சே வரல

//கண்ணாடி பதித்த
உன் ஸ்டிக்கர் பொட்டு தேர்வுகளோ//

என்ன ஒரு அவதானிப்பு, சமயத்துல இந்த மாதிரி நுட்பமான அவதானிப்பு இருப்பது நம்முடைய பலமா பலவீனமா அப்படீன்னு லாம் தோணும். எனக்கும் தான் ஒன்றும் புரியவில்லை.

//நான் போதும் எனக்கு// இதற்கும் என்ன சொல்வதெனத் தெரியவில்லை, ரொம்ப அருமையான கவிதை.

said...

great man! i love this

said...

வருகைக்கு நன்றி குரு...

நன்றி நவாஸீதீன்...

நன்றி சரவணன்...

நன்றி விபா...

நன்றி தமிழன்...

நன்றி வித்யா...

நன்றி சிவாஜி சங்கர்...

நன்றி யாத்ரா :)

நன்றி அய்யனார்...

said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ்.

said...

மிக அருமை :))

said...

நன்றி ராஜா சார்...

வாங்க மேடம்...நன்றி ஸ்ரீமதி :))

said...

//ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது... //

ராஜேஷ்,

உண்மையிலேயே “ரெளத்ரம்” தான்.

said...

மிகவும் அழாகான கவிதை...வாழ்த்துக்கள்...

said...

நன்றி சத்ரியன்...

நன்றி கமலேஷ்...

said...

நன்றி சத்ரியன்...

நன்றி கமலேஷ்...