Monday, December 24, 2007

மானுடம்....

சொற்களின் வீதிகளினின்று
வீசியெறியப்படுகிறதோர்
மௌனம்...

வேர்கள் அறுபட
கிளைக்கூட்டினின்று
தெறித்தோடுமோர் பறவை...

காலமற்றதோர் புள்ளியில்
கரையும் நினைவுகள்....

அனுக்களென
அதை சிதைக்குமோர்
கூர்கத்தி....

காற்றோடு
கலக்கின்றன
சில அதிர்வுகள்...

மூச்சையடக்கி
முயங்கும் இரவில்
குழலின் துளைக்குள்
இசையென பயணம்...

ஈரக்காற்றில்
உயிர்க்குமோர் விதை...

மீண்டும்
அலகினைத் தீட்டிக்கொண்டு
காத்திருக்கிறதோர்
மரங்கொத்திப் பறவை....

1 comments:

said...

//சொற்களின் வீதிகளினின்று
வீசியெறியப்படுகிறதோர்
மௌனம்...

வேர்கள் அறுபட
கிளைக்கூட்டினின்று
தெறித்தோடுமோர் பறவை...//



மானுடம் பற்றிய உங்கள் உணர்வுகள் வித்தியாசமானது என்று சொல்வதைக் காட்டிலும் அழகானதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மானுடம் என்ற வரம்பிற்குள் நிற்கும் இந்த கவிதையில் மானுடத்தின் பால் ஒரு நிசப்தத்தை உணரமுடிகின்றது.