Wednesday, December 26, 2007

சிறகின் விடுதலை...

கனவின் ஸ்கலிதமாய்
நிகழ்ந்துவிடும்
இத்துயரங்களினின்று
தப்பிவிடும் வேட்கையில்
தெறித்து விண்டும்
வீணையின் நரம்பென
வேர்கள் அறுபட
சுழித்துவரும்
நதிப்பிரவாகத்து
மண்டையோடுகளின் மீதாக
கால்பாவி விரைகையில்
விரலிடுக்கின் சூட்சும கயிற்றோடு
ஒட்டிக்கொண்டு உடன் வருகிறது
பால்ய ஸ்நேகத்து
நிலாப்பட்டம்.....

2 comments:

said...

அடேயப்பா என்னதிது?? மூச்சுவிடாம படிச்சேன் :))

said...

//ஸ்கலிதமாய்//

அப்படின்னா என்ன??