Saturday, October 31, 2009

ஒரு ரோஜாவை...

ஒரு ரோஜாவை
ரோஜாவாய் நான்
பார்ப்பது எப்போது?
இதழடுக்கில் உருளும்
பனித்துளியோடு
இக்கனத்தின் ஒளியோடு
ரோஜாவாய் இருக்கிறது அது...
என் சொற்களால்
அதன் சுமை கூடாமல்
ஒரு புன்னகைக்கு வற்புறுத்தாமல்
கொஞ்சமும் அவிழாமல்
என் நேசத்தை எப்படி சொல்வது?
ஒரு கனம்
தன் புலம் விட்டு
என்னை நகர்த்தி விடும் முன்
இந்த ரோஜாவை
ரோஜாவாய் நான்
பார்ப்பது எப்போது?

14 comments:

said...

எனக்கும் தெரியல... நீங்க சொல்லுங்க.

said...

:)
could see you're longing for so long? :)

-vidhya

said...

:)

நல்லா இருக்குங்க

கொஞ்சம் தட்டச்சு பிழைகள்...

கவனிங்களேன்

said...

நன்றி கருணாகரசு...

அட..எனக்கு தெரிஞ்சா நான் ஏன் கவிதையெல்லாம் எழுதப் போறேன் :)

நன்றி வித்யா...வேற வழி? :)

நன்றி நேசன்...கவனிக்கறேன்...

said...

நல்லா இருக்கு ராஜேஷ்!

said...

நன்றி ராஜா சார்..இத்தோடு இந்த கவிதை கொலைகளை நிறுத்தி கொள்ளலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது..என்ன செய்வது..பொறுத்து கொள்ளுங்கள் :)

said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.

said...

வருகைக்கு நன்றி உயிரோடை...

பகிர்வுக்கு நன்றி வித்யா.

said...

அய்யா சாமி
என்ன ஒரே கவிதை மழையா பொழியரீங்க
முடியல
நாலு போஸ்ட் படிக்காமா இருக்கேன்னு வந்து பாத்தா
:-((

said...

வாங்க கார்த்திக்...

என்னாலயும் தான்.கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

:))

said...

எனது முதல் வருகையின்போதே ரோஜாவின் நறுமணம் கிடைத்திருக்கிறது ரௌத்ரன். கவிதை அருமை

said...

வருகைக்கு மிகவும் நன்றி நவாஸ் சார் :)

said...

மிக அருமை :))

said...

நன்றி ஸ்ரீமதி :))