Saturday, October 10, 2009

மௌன சினுங்கல்கள்...

கற்பக விநாயகர்
குறுக்கு சந்தில்
நீ குடியிருந்த அந்த
பழைய ஓட்டு வீட்டு
வாசலிலிருந்து
பொறுக்கி வந்தேன்
ஒரு பச்சை நிற
வளையல் துண்டை...

இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை?

13 comments:

said...

//இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை? //

:( உடைந்திருந்தால் கஷ்டம்தான் ...

said...

//மௌன சினுங்கள்கள்...///

மெளன சினுங்கல்கள் - சரியா...?

said...

வாங்க ஆயில்யன்...

வருகைக்கு நன்றி.

மாற்றி விட்டேன் :)

இப்பொழுது சரி செய்ய முடிவதெல்லாம் எழுத்து பிழையை மட்டுமே...

said...

//வாசலிலிருந்து
பொறுக்கி வந்தேன்
ஒரு பச்சை நிற
வளையல் துண்டை...

இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை? //

ரெளத்ரன்,

சிரமம் தான்!

ஒலியலை காற்றோடு கலந்துப் போயிருக்குமே!

பிரிந்த பின்னும் நிகழ்ந்துக் கொண்டேயிருப்பதே....!உங்களின் கவிதை.

said...

கலவி நேரத்து சிணுங்கல்கள் , குறுமுடி அசைவு , ஓர உதட்டு புன்னகைகள்
கவிதைகளில் மட்டும் சேகரம் ஆகின்றன

கவிதை அழகு

said...

//ஒலியலை காற்றோடு கலந்துப் போயிருக்குமே!//

நன்றி சத்ரியன் :)

//கலவி நேரத்து சிணுங்கல்கள் , குறுமுடி அசைவு , ஓர உதட்டு புன்னகைகள்
கவிதைகளில் மட்டும் சேகரம் ஆகின்றன//

ஒரு பச்ச மண்ண இப்படியா பயமுறுத்தறது :))


நன்றி நேசன்...

said...

இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை//

ரெளத்ரனில்... மெல்லினம்!!!!!!!!

கவிதைமிக சிறப்பு... பாராட்டுக்கள்.

said...

வருகைக்கு நன்றி கருணாகரசு...

said...

ரொம்ப புதுசா இருக்கு ராஜேஷ்,உங்களின் இந்த மொழி!தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு,வாய் விட்டு பேசுவது மாதிரி.அருமையாய் இயங்கி இருக்கிறது.beutiful!

said...

நன்றி ராஜா சார்..நீங்கள் வாசிக்கும் விதம் கூட அலாதியாகத் தான் இருக்கிறது :)

said...

வெகு அருமை :)))

said...

இப்ப வருகிற செல்பொனில் வாய்ஸ் பதிவு பண்ணலாம் தல!

said...

நன்றி ஸ்ரீமதி :)

வாங்க வால்..செல்ஃபோன் தொலஞ்சு போனா தொடர்பு எண்கள மீட்டுக்கலாம்..தொலஞ்சு போனத எப்படி மீட்டுக்கறது தல :))